பைக் விபத்தில் காயமடைந்த வாலிபர் பலி

11-11-2019 01:47 AM

கடையம்:

கடையம் அருகே விபத்தில் காயமடைந்த வாலிபர் பலியானார்.

கடையம் அருகே வடமலைபட்டி ராமசுவாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் நயினார் (75). இவர் கடந்த 5ம் தேதி வடமலைபட்டி சாலையில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த கட்டளையூரை சேர்ந்த சுடலைமாடன் மகன் வேல்முருகன் (30), ஓட்டி வந்த பைக் முதியவர் மீது மோதியது.

இதில் நயினாருக்கு கால் முறிவு ஏற்பட்டது. வேல் முருகன் பலத்த காயமடைந்தார். இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டனர். இதில் நயினாரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

வேல் முருகன் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து கடையம் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்.