பாபநாசம் ஆற்றில் பழைய துணிகள் நகராட்சி பணியாளர்கள் அகற்றம்

11-11-2019 01:47 AM

விக்கிரமசிங்கபுரம்:

பாபநாசத்தில் திதி கொடுக்க வருபவர்கள் கழட்டி போடப்பட்ட பழைய துணிகளை விக்கிரமசிங்கபுரம் நகராட்சியினர் அள்ளி அப்புறப்படுத்தினர்.

மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி கமிஷனர் காஞ்சனா ஆலோசனையின் பேரில் நகராட்சியை சேர்ந்த சுகாதார பணியாளர்கள் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் தண்ணீருக்குள் மற்றும் கரையில் திதி கொடுக்க வருபவர்களால் கழட்டி போடப்பட்ட துணிகளை சேகரித்து அப்பறப்டுத்தி வருகின்றனர்.

நகராட்சி சுகாதார ஆய்வாளர் கணேசன் மற்றும் மேஸ்திரி மில்லர் மேற்பார்வையில் நேற்று பாபநாசத்தில் 5.25 டன் பழைய துணிகளை நகராட்சி சுகாதார பணியாளர்கள் சேகரித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.