போலீஸ் வாகனம் மோதி பலியான பெண் குடும்பத்திற்கு நிதி வழங்கல்

11-11-2019 01:31 AM

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே போலீஸ் வாகனம் மோதி பலியான பெண்ணின் குடும்பத்திற்கு, தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியின் கீழ், அறிவிக்கப்பட்ட ௩ லட்ச ரூபாய்க்கான செக்கினை, தென்காசி ஆர்.டி.ஒ., பழனிக்குமார் வழங்கினார்.

கடையநல்லூர் அருகேயுள்ள திரிகூடபுரம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த மைதீன்பிச்சை மனைவி ஆயிஷாபானு (௩௬). இவரது மகள் ஆஷிகா மற்றும் பீர்முகமது மகள் ஹன்சாள்பீவி

திரிகூடபுரம் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த போலீஸ் வாகனம் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்ததில், பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த ஆயிஷா பானு (எ) மல்லிகா, ஆஷிகா, ஹன்சாள்பீவி உள்ளிட்ட ௩ பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் ஆயிஷா பானு சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ௩ லட்ச ரூபாய் வழங்கப்படுமென, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதனையடுத்து ௩ லட்ச ரூபாய்க்கான செக்கினை, நேற்று காலை ஆயிஷா பானு குடும்பத்தாரிடம் தென்காசி ஆர்.டி.ஒ., பழனிக்குமார் வழங்கினார்.

நிகழ்ச்சியில் கடையநல்லூர் தாசில்தார் அழகப்பராஜா, புளியங்குடி டி.எஸ்.பி., சக்திவேல், முன்னாள் பஞ்., தலைவர் உடையார்சாமி மற்றும் ஆயிஷா பானு குடும்பத்தினர் உடனிருந்தனர்.