இருளில் மூழ்கிய எஸ்.பி ஆபீஸ் அணுகு ரோடு

11-11-2019 01:30 AM

நாகர்கோவில்,:

நாகர்கோவில் வடக்கு ரத விதியிலிருந்து எஸ்.பி ஆபீஸ் செல்லும் ரோடு மின் விளக்கு ஒளிராததால் இருளில் மூழ்கி அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நாகர்கோவில் வடக்கு ரத வீதியிலிருந்து எஸ்.பி ஆபிஸ் செல்லும் ரோடு உள்ளது. இந்த ரோடு வழியாக எராளமான இரு சக்கரவாகனங்கள்,  ஆட்டோக்கள் செல்வது உண்டு.  இந்த ரோட்டில் ஏராளமான ஆண்களும் பெண்களும்  செல்வது உண்டு. இந்த ரோட்டில் நாகர்கோவில் நகராட்சியின் ஒரு மின் விளக்கு உண்டு. இந்த விளக்கு நீண்ட நாட்களாக ஒளிரவில்லை. இதனால் இரவு நேரத்தில் இந்த ரோடு இருளில் மூழ்கி உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த ரோடு வழியாக வரும் பெண்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். இரவு பத்து மணிக்கு மேல் சமுக விரோதிகளின் கூடாரமாகி வருகிறது.  இந்த ரோட்டில் மது அருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த ரோட்டில் மின்விளக்கை ஒளிர செய்ய நடவடிக்கை எடுப்பது மட்டுமல்ல கூடுதலாக மின்விளக்கு அமைக்கவும் நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் விரும்புகின்றனர்.