வெள்ளிமலை கோயிலில் பவுர்ணமி கிரிவலம்

11-11-2019 01:28 AM

மணவாளக்குறிச்சி:

வெள்ளிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோயில் பவுர்ணமி கிரிவலம் நாளை நடக்கிறது.

நாளை காலை 5 மணிக்கு நடை திறப்பு, தீபாராதனை, அபிஷேகம், மதியம் 12.30 மணிக்கு தீபாராதனை, மாலை 5 மணிக்கு பவுர்ணமி கிரிவலம்  ஹிந்து தர்ம வித்யாபீட சுவாமிகள் கருணானந்த மகராஜ் தலைமையில் நடக்கிறது.  ஆலய முன்னேற்ற சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெண்கள்,  ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். பானகம் வழங்கல்,  மாலை 6.30,  இரவு 7.30 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை வெள்ளிமலை ஆலய முன்னேற்ற சங்கத்தினர் செய்து வருகின்றனர்.