மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு

11-11-2019 01:28 AM

அஞ்சுகிராமம்:

அழகப்பபுரத்தில் மார்பக புற்றுநோய் குறித்து பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

பெண்களுக்கு மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் அழகப்பபுரத்தில் புனித அந்தோணியார் பங்கு பேரவை, கொட்டாரம் பிளசிங் கேன்சர் சென்டர் சார்பில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. பங்குத்தந்தை நெல்சன் பால்ராஜ் கருத்தரங்கை துவங்கி வைத்தார். பங்கு பேரவை துணை தலைவர் விக்டர் நவாஸ், அன்னை நற்பணி மன்ற தலைவர் ஜாண் கிறிஸ்டோபர், பங்கு பேரவை பொருளாளர் டேவிட் ஜெயராஜ் முன்னிலை வகித்தனர். நிதிக்குழு உறுப்பினர் குரூஸ் அலங்காரம் வரவேற்றார். புற்று நோய் சிறப்பு நிபுணர்  சுதாகர்  புற்றுநோய் அறிகுறிகள்,  உணவுக்கும் புற்று நோய்க்கும் தொடர்பு,  பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாக வாழ்தல், ஆரம்ப நிலையை கண்டறிவது  குறித்து விளக்கினார். கருத்தரங்கில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். பங்கு பேரவை செயலாளர் குரூஸ் அருள் விஜி நன்றி கூறினார்.