மலையோர பகுதிகளில் சாரல் மழை

11-11-2019 01:28 AM

வேர்க்கிளம்பி:

குமரியில் மலையோர பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.

குமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்தது. கடந்த வாரம் மழை வெறித்தது. இந்த நிலையில் தற்போது குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் ஆங்காங்கே மீண்டும் சாரல் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மலையோர பகுதிகளில் வெப்பம் தணிந்து காணப்படுகிறது. விவசாய பயிர்களுக்கும் பயன் உள்ளதாக அமைந்துள்ளது. மழை காரணமாக ரப்பர் பால் வடிக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. நகர் பகுதிகளில் வெப்பம் சற்று அதிகமாகவே உள்ளது.