கொடுங்கையூரில் பறக்குது வெள்ளை காக்கா - பொதுமக்கள் ஆர்வமுடன் பார்க்கின்றனர்

25-10-2019 01:51 PM

சென்னை,

கொடுங்கையூரை வலம் வரும் வெள்ளை காகத்தை, பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

காகங்கள் பொதுவாக கறுப்பு நிறத்தில் தான் இருக்கும். வெள்ளை காகம் என்பது மிக அரிதான ஒன்று.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் தான், வெள்ளை நிற காக்கையைக் காண முடியும்.
அடர்ந்த காட்டுப்பகுதியில், கூடு கட்டி வாழும் இவற்றை தமிழ்நாட்டில்  கொல்லிமலை பகுதிகளில் காண முடியும் என்கின்றனர்.
கொடுங்கையூரில் வெள்ளை காக்கை
சென்னை, சின்ன கொடுங்கையூர், சீதாராமன் நகர், ஏழாவது தெருவில், கறுப்பு காகங்களுடன் சேர்ந்து வெள்ளை நிற காகம் ஒன்றும் வலம் வருகிறது.

கொடுங்கையூரில் பிரபலமான இந்த வெள்ளை காகத்தை, அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

வேதாராண்யம் பறவைகள் சரணாலயத்திற்கு அவ்வப்போது வெள்ளைக் காகங்கள் வந்து செல்கின்றன. ஆனால் சென்னையில் வெள்ளை காகம் என்பது அபூர்வம்தான்.Trending Now: