தமிழகம் முழுவதும் 18 டி.எஸ்.பி.,க்கள் டிரான்ஸ்பர்

10-10-2019 08:59 AM

திருநெல்வேலி,:

நெல்லை மாநகர நுண்ணறிவுப்பிரிவு உதவி கமிஷனர் உட்பட 18 பேர் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 18 டி.எஸ்..பி,க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில், நெல்லை மாநகர நுண்ணறிவுப்பிரிவு உதவி கமிஷனராக  பணியாற்றி வந்த நாகசங்கரன், ராஜபாளையம் சப்–டிவிஷன் டி.எஸ்.பி.,யாகவும், மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., ஆறுமுகம் மாநகர நுண்ணறிவுப் பிரிவுக்கு மாற்றப்பட்டு ள்ளனர். இதுபோல், டவுன் குற்றப்பிரிவு உதவி கமிஷனராக இருந்த பீட்டர்  பால்துரை, குமரி மாவட்டம் நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவுக்கும், குமரி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.,நெல்லை டவுன் குற்றப்பிரிவு உதவி கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக டி.ஜி.பி.,திரிபாதி வெளியிட்டுள்ளார்.Trending Now: