அம்பை அருகே கொலை வழக்கு கோவில்பட்டி கோர்ட்டில் ஒருவர் சரண்

10-10-2019 08:55 AM

அம்பாசமுத்திரம்,:

அம்பாசமுத்திரம் அருகே கட்டட தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவான கட்டட கான்ட்ராக்டர் கோவில்பட்டி கோர்ட்டில் சரணடைந்தார்.

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள பிரம்மதேசம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜகோபால்(60). கட்டட தொழிலாளி. இவரது மருமகளை, அதே பகுதியை சேர்ந்த கணேசன் (37) அவதூறாக பேசியுள்ளார். இதனை ராஜகோபால், அவரதுமகன் கண்ணன் தட்டிக்கேட்டனர். இதனால் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ராஜகோபாலை, கணேசன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினார்.

இதுகுறித்து அம்பாசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை தேடிவந்தனர். இந்நிலையில், அவர் நேற்று கோவில்பட்டி கோர்ட்டில் சரணடைந்தார். அவரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.Trending Now: