தமிழகத்தில் பாஜ.,வின் அடிமை ஆட்சி: தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் ஆவேசம்

10-10-2019 08:54 AM

திருநெல்வேலி:

தமிழகத்தில் எம்.ஜி.ஆர்.,ஜெ., எடப்பாடி ஆட்சி நடக்கவில்லை. பாஜ.,வின் அடிமை ஆட்சி தான் நடக்கிறது என களக்காடு மாவடியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் திமுக.,தலைவர் ஸ்டாலின் கடுமையாக சாடினார்.

நாங்குநேரி இடைத்தேர்தலை முன்னிட்டு காங்.,கட்சி வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திமுக.,தலைவர் ஸ்டாலின் நேற்று மாலை ஏர்வாடி, திருக்குறுங்குடி, களக்காடு, கீழசடையமான் குளம் ஆகிய இடங்களில் அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

 களக்காடு மாவடியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் திமுக.,தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலுக்காக உங்களிடம் ஆதரவு கேட்டு கை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு இங்கு வந்துள்ளேன். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்.,வேட்பாளராக போட்டியிடும் ரூபி மனோகரனுக்கு உங்கள் ஆதரவை தரவேண்டும். உங்களிடம் ஓட்டு கேட்க மட்டும் இங்கு வரவில்லை. நன்றி சொல்லவும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கிறேன். தமிழகம் மற்றும் புதுவையை சேர்த்து 40 பார்லி.,தொகுதிகளில் 39 தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஓட்டு போட்டு அமோக வெற்றிபெறச் செய்துள்ளீர்கள். அதற்காக நன்றி கூறுகிறேன். நீங்கள் மத உணர்வுள்ள ஆட்சியை மாற்றுவதற்காக ஒட்டு போட்டீர்கள். ஆனால் தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் முழுமையான ஆTrending Now: