நெல்லை காங்.,அலுவலகத்தில் பக்தவச்சலம் பிறந்த நாள் கொண்டாட்டம்

10-10-2019 08:46 AM

திருநெல்வேலி,:

நெல்லை காங்.,கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் பக்தவச்சலத்தின் 122வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பக்தவச்சலத்தின் 122வது பிறந்த நாள் விழா கொக்கிரகுளம் காங்.,கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. மாநகர் மாவட்ட காங்.,தலைவர் சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக காங்.,மாநில தலைவர் அழகிரி, காங்.,சட்டசபை தலைவர் ராமசாமி, பக்தவச்சலத்தின் திருவுருவுப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், செயல் தலைவர் எம்.பி.,வசந்தகுமார், முன்னாள் எம்.பி.,ராமசுப்பு, கர்நாடக காங்.,தொழிற்சங்க தலைவர் பிரகாசம், மேற்கு மாவட்ட பொருளாளர் முரளிராஜா, சிறுபான்மை பிரிவு அமீர்கான், மதுரை மாவட்டத் தலைவர் கார்த்திக வீரன்னசாமி, மாவட்ட துணைத் தலைவர் வெள்ளப்பாண்டியன், பொதுச்செயலாளர் சொக்கலிங்ககுமார், மனோகரன், மண்டல தலைவர்கள் மாரியப்பன், ஐயப்பன், சிறுபான்மை பிரிவு அனஸ்ராஜா, மாவட்ட செயலாளர் மணி உட்பட பலர் கலந்து கொண்டனர். பைபாஸ் மெடிக்கல் சண்முகவேலன் நன்றி கூறினார்.

ஐ.என்.டி.யு.சி.,:

வண்ணார்பேட்டை ஐ.என்.டி.யு.சி.,அலுவலகத்தில் பக்தவச்சலத்தின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாநிலச் செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் பக்தவச்சலத்தின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பக்தவச்சலம் நினைவு அறக்கட்டளை தலைவர் சுப்பிரமணியன், பைபாஸ் சண்முகவேலன், தேசிய நல்லாசிரியர் செல்லப்பா, கோமதிநாயகம், ஐ.ஓ.பி.,கந்தசாமி, ரெங்கராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.