உட­னடி பஸ் வச­தி அமைச்­சருக்கு பாராட்டு

10-10-2019 08:42 AM

களக்காடு :

நாங்­கு­நேரி சட்­ட­சபை இடைத்­தேர்­த­லில் போட்­டி­யி­டும் அதி­முக வேட்­பா­ளர் நாரா­ய­ணன், பால்­வ­ளத்­துறை அமைச்­சர் கே.டி.ராஜேந்­தி­ர­பா­லாஜி தெற்­கு­கா­டு­வெட்டி கிரா­மத்­தில் தின்னை பிரசா­ரம் செய்து இரட்டை இலை சின்­னத்­தில் ஓட்டு சேக­ரித்­த­னர். அப்­ப­குதி கிராம மக்­க­ளின் கோரிக்­கையை அமைச்­சர் கேட்­ட­றிந்­தார்.

அப்­போது பேசிய கிராம மக்­கள் கடந்த சில தினங்­க­ளாக எங்­க­ளது கிரா­மத்­தில் இருந்து இயக்­கப்­பட்ட அரசு பேருந்து திடீ­ரென நிறுத்­தப்­பட்டு விட்­டது.எனவே தொடர்ந்து அரசு பஸ் இயக்க வேண்­டும் என்­று வலி­யு­றுத்­தி­னர. கிராம மக்­க­ளின் கோரிக்­கையை போக்­கு­வ­ரத்து துறை அமைச்­சர் விஜ­ய­பாஸ்­கர் கவ­னத்­திற்கு செல்­போ­னில் உட­ன­டி­யாக தொடர்பு கொண்டு அமைச்­சர் கே.டி.ராஜேந்­தி­ர­பா­லாஜி பேசி­னார். அத­னைத் தொடர்ந்து கிராம மக்­க­ளும் போக்­கு­வ­ரத்­து­துறை அமைச்­ச­ரி­டம் செல்­போ­னில் பேசினர். நிறுத்­தப்­பட்ட அர­சுப் பஸ் உட­ன­டி­யாக இயக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று கிராம மக்­க­ளி­டம் போக்­கு­வ­ரத்து துறை அமைச்­சர் உறுதி அளித்­தார். அதைத் தொடர்ந்து கிராம மக்­கள் அனை­வ­ரும் கைதட்டி வர­வேற்­ற­னர்.

அமைச்­சர் கே.டி.ராஜேந்­தி­ர­ா­லா­ஜிக்கு நன்றி தெரி­வித்­த­னர்.