இ.பி.எஸ்., ஆட்­சி­யில் எந்த தொந்­த­ர­வும் கிடை­யாது: அமைச்­சர் ராஜேந்­தி­ர­பா­லாஜி ‘சர்டிபிகேட்’

10-10-2019 08:42 AM

களக்­காடு:

எந்த தொழி­லாக இருந்­தா­லும் இ.பி.எஸ்., ஆட்­சி­யால் எந்த தொந்­த­ர­வும் கிடை­யாது என்று அமைச்­சர் கே.டி.ராஜேந்­தி­ர­பா­லாஜி பேசி­னார்.   

நாங்­கு­நேரி சட்­டசபை தொகுதி இடைத்­தேர்­த­லில் அதி­முக வேட்­பா­ளர் நாரா­ய­ண­னுக்கு ஆத­ர­வாக களக்­காடு ஒன்­றிய பகு­தி­க­ளில் பால்­வ­ளத்­துறை அமைச்­சர் கே.டி.ராஜேந்­தி­ர­பா­லாஜி தேர்­தல் பிர­சா­ரம் செய்து இரட்டை இலை சின்­னத்­திற்கு ஓட்டு சேக­ரித்து வரு­கின்­றார்.

சிங்­கி­கு­ளம் கிரா­மத்­தில் அமைச்­சர் கே.டி.ராஜேந்­தி­ர­பா­லாஜி, தலை­மை­யில் அதி­முக நிர்­வா­கி­கள் திண்ணை பிரசா­ரம் மேற்­கொண்டு இரட்டை இலை சின்­னத்­திற்கு ஓட்டு சேக­ரித்­த­னர்.. கிராம மக்­க­ளி­டத்­தில் குறை­களை கேட்­ரிந்து அமைச்­சர் பேசும்­போது, ‘‘ஜெய­ல­லிதா வழி­யில் தமி­ழ­கத்­தில் எடப்­பா­டி­யார் சிறப்­பான ஆட்சி நடத்தி வரு­கின்­றார். ஏழை, எளிய மக்­கள் விரும்­பும் ஆட்சி தமி­ழ­கத்­தில் நடந்து வரு­கின்­றது. விவ­சா­யி­க­ளின் நலன் கருதி திட்­டங்­கள் செய்ல்­ப­டுத்­தும் ஆட்சி நடந்து வரு­கின்­றது. இந்த ஆட்­சிக்கு தமி­ழக மக்­கள் என்­றும் உறு­து­ணை­யாக இருக்க வேண்­டும். பட்­டா­ளி­கள், படைப்­பா­ளி­கள், நெசவு தொழி­லா­ளர்­கள், சுமை தூக்­கும் தொழி­லா­ளர்­கள் உட்­பட அனைத்து தரப்பு மக்­க­ளும் விரும்­பும் வகை­யில் எடப்­பா­டி­யார் ஆட்சி நடத்தி வரு­கின்­றார். நடந்து முடிந்த பார்லி., தேர்­தல் என்­பது மத்­தி­யில் யார் பிர­த­ம­ரா­வது மோடியா அல்­லது ராகுலா? தமி­ழ­கத்தை எடப்­பா­டி­யார் ஆள்­வதா? ஸ்டாலின் ஆள்­வதா? என்­ப­தற்­கான தேர்­தல். நாடு முழு­வ­தும் மோடியே பிர­த­ம­ராக வேண்­டும் என்­றும் முதல்­வர் எடப்­பாடி பழ­னிசாமி ஆட்சி தொடர வேண்­டும் என மகத்­தான தீர்ப்பை அளித்­த­னர். அதி­முக ஆட்­சியை எவ­ரா­லும் அசைக்க முடி­யாது. களக்­காடு பகுதி கிரா­மங்­கள் சூழ்ந்த பகுதி. இது

அ.தி.மு.க.வின் கோட்­டை­யா­க­யா­கும். எந்த தொழி­லாக இருந்­தா­லும் எடப்­பா­டி­யார் ஆட்­சி­யால் எந்த தொந்­த­ர­வும் கிடை­யாது. அதி­முக ஆட்­சி­யில் நடை­பெ­றும் வளர்ச்சி திட்­டங்­க­ளை­யும் வாக்­கா­ளர்­கள் எண்­ணிப்­பார்க்க வேண்­டும். அதி­முக சார்­பாக நாங்­கு­நேரி தொகு­தி­யில் போட்­டி­யி­டும் நாரா­ய­ணன் கூப்­பிட்ட குர­லுக்கு ஓடோடி வரு­ப­வர். எம்­ஜி­ஆ­ரின் பக்­தர், ஜெய­ல­லி­தா­வின் விசு­வாசி. இந்த தொகு­தியை நன்­றாக வைத்­துக்­கொள்­வார்.. வாக்­கா­ளர்­கள் இரட்டை இலை சின்­னத்­திற்கு ஓட்ட­ளிக்க வேண்­டும் களக்­காடு பகுதி கிரா­மங்­க­ளில் அடிப்­படை வச­தி­கள் செய்து கொடுக்க நட­வ­டிக்கை எடுக்­க­கப்­ப­டு்ம். முதி­யோர் உத­வித்­தொகை, பட்டா வழங்­க­வும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்’’ என்றார்.

கூட்­டத்­தில் அதி­முக நிர்­வா­கி­கள், தேர்­தல் பொறுப்­பா­ளர்­கள், விரு­து­ந­கர் மாவட்ட நிர்­வா­கி­கள் தேர்­தல் பொறுப்­பா­ளர்­கள் கலந்து கொண்­ட­னர்.