நாங்­கு­நேரி தொகு­தி­யில் போலீசார் அணி­வ­குப்­பு

10-10-2019 08:38 AM

திரு­நெல்­வேலி:

நாங்­­கு­நேரி தொகு­­தியில் போலீசார் அணி­வ­குப்பு நடத்­தி­னர்.

நாங்­கு­நேரி இடைத்­தேர்­தலில் மக்கள் அச்­ச­மின்றி ஓட்டு அளிக்க விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்தும் வகையில் போலீசார் கொடி அணி­வகுப்பு ஊர்­வ­லங்­களை நடத்தி வரு­கின்­ற­னர். சேரன்­ம­கா­தேவி ஏ.எஸ்.பி., ஆஷிஸ்­­ரா­வத், முன்­னீர்­பள்ளம் இன்ஸ்பெக்டர் சீதா­லட்­சுமி தலைமையில் தருவை, ஈஸ்­வ­ரி­யா­புரம், கண்­டித்­தான்­குளம், அடை­மி­திப்­பான்­கு­ளத்தில் போலீசார் நேற்று அணி­வ­குப்பு நடத்­தி­னர்.

களக்­காடு இன்ஸ்­பெக்டர் மேரி ஜெமிதா தலை­மையில் புதூர், சுப்­பி­ர­ம­ணி­ய­புரம், கடம்­போ­டு­வாழ்வு பகு­தி­யிலும், நாங்­கு­­நேரி இன்ஸ்­பெக்டர் சபா­பதி தலை­மையில் ஏமன்­குளம், சுப்­பி­ர­ம­ணி­ய­பு­ரத்­திலும், ஏர்­வாடி இன்ஸ்­பெக்டர் ஸ்டீபன் ஜி.ஆர்.ஜோஸ் தலை­மையில் தள­வாய்­புரம் காலனி, நம்­பித்­த­லைவன் பட்­டயம், தென்­க­ரை­யிலும், திசை­யன்­விளை இன்­ஸ்­பெக்டர் ஜூடி தலை­மையில் மன்­னார்­கு­ளம், சட­கோ­ப­நா­மி­யா­புரம், மலை­யாங்­கு­டி­யி­ருப்பு, சங்­க­னாங்­கு­ளத்தில் போலீசார்அணி­வ­குப்பு நடத்­தி­னர்.