கலெக்டரின் சிறப்பு மனுநீதித்திட்ட முகாம்

10-10-2019 08:30 AM

நாகர்கோவில்:

ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு கலெக்டரின் சிறப்பு மனுநீதித்திட்ட முகாம் இன்று நடக்கிறது.

தோவாளை வட்டம் ஆரல்வாய்மொழி வடக்கு வருவாய் கிராமம் ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆரல்வாய்மொழி அரசு மேல்நிலைப் பள்ளியில் கலெக்டரின் சிறப்பு மனுநீதித்திட்ட முகாமின் முதற்கட்ட நிகழ்ச்சி இன்று (10ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது என கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.