பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்

10-10-2019 08:30 AM

நாகர்கோவில்,:

பொது விநியோகத்திட்ட சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்  12ம் தேதி நடக்கிறது.

அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் கணியாகுளம் பகுதிக்கு கணியாகுளம் ஊராட்சி அலுவலகத்திலும், தோவாளை வட்டத்தில் தோவாளை பகுதிக்கு தோவாளை ஊராட்சி அலுவலகத்திலும், கல்குளம் வட்டத்தில் திருவிதாங்கோடு பகுதிக்கு திருவிதாங்கோடு பேரூராட்சி அலுவலகத்திலும், விளவங்கோடு வட்டத்தில் களியல் பகுதிக்கு களியல் பேரூராட்சி  அலுவலகத்திலும், திருவட்டார் வட்டத்தில் அருவிக்கரை பகுதிக்கு அருவிக்கரை ஊராட்சி அலுவலகத்திலும், கிள்ளியூர் வட்டத்தில் கிள்ளியூர் பகுதிக்கு கிள்ளியூர் பேரூராட்சி அலுவலகத்திலும் வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில்  காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது என கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.