தேசிய அஞ்சல் வாரம் துவக்கம்

10-10-2019 08:29 AM

நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய அஞ்சல் வாரம் துவக்கி வைக்கப்பட்டது.

1874 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 9ம் தேதி சுவிட்சர்லாந்தில்  சர்வதேச அஞ்சல் ஒன்றியம் துவக்கப்பட்டது.  அக்டோபர் மாதம் 9ம் தேதி உலக அளவில் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் உலக அஞ்சல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகிலேயே மிக அதிகமாக அஞ்சலகங்களை கொண்ட நாடு இந்தியா ஆகும். 1,50,333 அஞ்சலகங்கள் இந்தியாவில் உள்ளது. உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இந்தியாவில் தேசிய அஞ்சல் வாரமாக கொண்டாடப்படுகிறது. அஞ்சல் வாரத்தில் இன்லேண்ட், போஸ்ட் கார்டு, தபால் கவர், ஸ்டாம்புகள் போன்ற அஞ்சல் துறையில் பயன்படுத்தப்பட்டவைகளை நினைவுகூரும் வகையில் கடித போக்குவரத்து ஊக்குவிக்கும் விதமாக இருக்கும். குமரி மாவட்டத்தில் தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு நேற்று உலக அஞ்சல்  தினம் கடைபிடிக்கப்பட்டது. கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளர் சந்திரசேகர் தேசிய அஞ்சல் வாரத்தை துவக்கி வைத்தார். இன்று  வங்கிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. குழித்துறை தபால் நிலையத்தில் சிறு சேமிப்பு கணக்குகள், ஐ.பி.பி.பி கணக்குகள் துவங்கும் சிறப்பு மேளா நடக்கிறது. நாளை (11ம் தேதி) அஞ்சலக ஆயுள் காப்பீட்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது.  நாகர்கோவில், தக்கலை தலைமை தபால் நிலையங்களில் அஞ்சலக வாடிக்கையாளர்களுக்கு கிராமிய அஞ்சல் காப்பீடு துவங்குதல், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், டாக்டர்கள், வக்கீல்கள், இன்ஜினியர்கள், வல்லுநர்கள், பட்டபடிப்பு நர்சிங் போன்றவர்களுக்கு ஆயுள் காப்பீடு துவங்கும் முகாம் நடக்கிறது. 12ம் தேதி தபால் தலை சேகரிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. எனது தபால் திட்டத்தின்படி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் தலை பதித்த தபால் தலைகள் உடனுக்குடன் கொடுக்கப்படும். மாணவ, மாணவிகள் அருகில்  உள்ள அஞ்சலகங்களை பார்வையிட்டு அஞ்சலக செயல்பாடுகளை தெரிந்து கொள்ளும் விதமாகவும், நாகர்கோவில், தக்கலை அஞ்சலகங்களில் தபால்தலை கண்காட்சி நடக்கிறது. 14ம் தேதி வணிக மேம்பாட்டு தினம் அனுசரிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள எல்.ஐ.சி. முகவர்கள், வங்கி ஊழியர்கள், தனியார் ஜூவல்லர்ஸ் நிறுவனர்கள், தொழில் நிறுவனர்கள், தொழிலாதிபர்களின் ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் முதுநிலை அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கிறது. 15ம் தேதி தபால்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. மாணவ, மாணவிகள் தபால் அலுவலகங்கள் சென்று ஊழியர்களின் பணிகளை பார்வையிடுவது, ஆதார் திருத்தம் செய்தல், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வினாடி வினா போட்டிகள் அஞ்சலக பின்கோடுகள், அஞ்சலக  சேவைகள்  குறித்து நாகர்கோவில், தக்கலை தலைமை அஞ்சலகங்களில் நடக்கிறது என கன்னியாகுமரி கோட்ட  அஞ்சலக முதுநிலை  கண்காணிப்பாளர் சந்திரசேகர் தெரிவித்தார்.  Trending Now: