ஓட்டுனர், நடத்துனர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

10-10-2019 08:29 AM

தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழக  குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

   தீபாவளி பண்டிகை ஞாயிற்றுகிழமை வருவதால் ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமை வார விடுப்பில் இருக்கும் அலுவலக பணியாளர்கள், அதிகாரிகளுக்கு ஒரு விடுப்பு இழப்பு ஏற்படும் என்பதற்காக தீபாவளிக்கான கழக விடுமுறையை விநாயகர் சதுர்த்திக்கு விடுப்பு மாற்றி மண்டல ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு தீபாவளி பண்டிகை கொண்டாடும் உரிமை மறுக்கப்பட்டு அன்றைய தினம் விடுப்பு மறுப்பு செய்து அனைவரும் பணிக்கு வர வேண்டும் என கூறியுள்ள நிர்வாகத்தை கண்டித்தும், பணியின் போது காவலர்களால் தாக்கப்பட்டு காயமுற்ற நடத்துனருக்கு பணி பாதுகாப்பு செய்து தர தவறிய மண்டல நிர்வாகத்தை கண்டித்தும் ராணித்தோட்டம் தலைமை அலுவலகம் முன் நடந்த  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் முருகன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். போராட்டத்தில் அரசு போக்குவரத்து கழக நடத்துனர்கள், ஓட்டுனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.