தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

10-10-2019 08:28 AM

நாகர்கோவில்,:

     கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவிலில்  நாளை காலை  தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

முகாமில்  கன்னியாகுமரி  மாவட்டம் மற்றும் பிற மாவட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நாகர்கோவில் கோணம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு  வருகை புரிந்து தங்களுடைய நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு,  டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணிணி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம்.

  முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள குமரி மாவட்டத்தை சேர்ந்த பதிவுதாரர்கள் நாளை (11ம் தேதி) காலை 10 மணிக்கு நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்திற்கு  வருகை தந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தனியார் துறையில் வேலைக்கு தேர்வு செய்யப்படும் பதிவுதாரர்களது வேலைவாய்ப்பு பதிவுமூப்பு விவரங்கள் ரத்து செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்படுகிறது. முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள  தனியார் நிறுவன பிரதிநிதிகள் 04652-264191 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.  இத்தகவலை  நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மரியசகாய ஆன்டனி தெரிவித்தார்.Trending Now: