குலசேகரத்தில் குடும்ப தியானம்

10-10-2019 08:28 AM

திற்பரப்பு:

குலசேகரத்தில் ஐக்கிய கிறிஸ்தவ அமைப்பு (யு.சி.ஓ.) சார்பில் ஒரு நாள் குடும்ப தியானம் நடந்தது.

குலசேகரத்தில் அனைத்து கிறிஸ்தவ சபைப் பிரிவுகளையும் ஒருங்கிணைத்த ஐக்கிய கிறிஸ்தவ அமைப்பு சார்பில் நடந்த தியான நிகழ்ச்சிக்கு அமைப்பின் தலைவர் மேஜர்  கிறிஸ்டோபர் செல்வநாத் தலைமை வகித்தார். ஆர்தோடாக்ஸ் சபையினர் இறை வணக்கம் பாடினர். மார்த்தாமா ஆலய அருள்பணியாளர் தாமஸ் கோஷி பனச்சமூட்டில் தொடக்க ஜெபம் செய்தார். சிஎஸ்ஐ சபையினர் வேதாகமம் வாசித்தனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜோஸ் பென்னட் வரவேற்றார். கீவர்க்கீஸ் பள்ளிவாதுக்கல் அறிமுகவுரையாற்றினார்.  பர்சிலிபி ரம்பன் தொடக்கவுரையாற்றினார்.   தியானம் நடந்தது. பொருளர் ரெத்தினம், இணைச் செயலர் வின்சென்ட், அனைத்து சபையினர் கலந்து கொண்டனர். ஆசிரியை டெல்லா ரோஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.  அனைத்து சபைகளைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். செயலர்  மோகன்தாஸ் நன்றி கூறினார்.