மஞ்சள் காமாலையால் பாதிப்படைந்து தலைமைக்காவலர் உயிரிழப்பு

10-10-2019 08:25 AM

சென்னை:

சென்னையில் மஞ்சள்காமாலை நோயால் உடல் நலம் பாதிப்படைந்த தலைமைக்காவலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை, பட்டாபிராம், நேதாஜிநகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 57). கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புகோட்டூர்புரம் காவல் நிலையத்தில் இருந்து மாறுதல் ஆகி ராயப்பேட்டை சட்டம், -ஒழுங்கு பிரிவிற்கு வந்தார். மூன்றுநாட்கள் பணிபுரிந்த அவர் பின்னர் மஞ்சள் காமாலை நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்டார். இதனால் சிகிச்சைபெறுவதற்காக அவர் விடுப்பில் சென்றார். இந்நிலையில் கடந்த 1ம் தேதியன்று அவருக்கு உடல்  நலம் மிகவும்பாதிப்படைந்தது. அவர்  ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை 4.45 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். -இவருக்கு வசுமதி என்ற மனைவியும், ஹேமாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். அவர் திருமணமாகி காஞ்சிபுரத்தில் கணவருடன் வசித்து வருகிறார். உயிரிழந்த ராஜேந்திரனின் உடலுக்கு போலீஸ் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.Trending Now: