லேண்ட்லைன் மறு இணைப்பு பி.எஸ்.என்.எல்., அழைப்பு

25-09-2019 01:36 AM

திருநெல்வேலி:

பி.எஸ்.என்.எல் தரைவழி மறு இணைப்பு சிறப்பு மேளா இன்று (25ம் தேதி) நடக்கிறது.

பி.எஸ்.என்.எல்., தரைவழி இணைப்புகளில் இருந்து இரவு 10.30 மணி முதல் காலை 6 மணி வரை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 24  மணி நேரமும் இந்தியாவில் எந்த ஒரு பகுதிக்கும் அனைத்து நெட்வொர்க்கிற்கும் அளவில்லா அழைப்புகள் பேசும் வசதி முற்றுலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் ஏற்கனவே தரைவழி இணைப்புகளை பெற்று தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ துண்டிக்கப்பட்ட நிலையிலுள்ள பாளை. பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்கள் மீண்டும் இணைப்பு பெற சிறப்பு மேளாக்கள் நடத்த முடிவு செய்துள்ளது.

இதற்காக பாளை., அன்புநகர், என்.ஜி.ஓ. காலனி, வி.எம்.சத்திரம், சாந்திநகர், வண்ணார்பேட்டை ஆகிய தொலைபேசி நிலையங்களில் இன்று (25ம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 5:30 மணி வரை சிறப்பு மறு

இணைப்பு மேளா நடக்கிறது.

பி.எஸ்.என்.எல் தரைவழி வாடிக்கையாளர்கள் இந்த மேளாக்களில் கலந்து கொண்டு சிறப்பு சலுகைகளுடன் மறு இணைப்பு பெறலாம்.

இத்தகவலை நெல்லை பி.எஸ்.என்.எல்., முதன்மை பொதுமேலாளர் சஜிகுமார் தெரிவித்துள்ளார்.