சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தி வந்த நபர் கைது: 16 கிலோ பறிமுதல்

25-09-2019 01:33 AM

சென்னை:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கஞ்சா கடத்தி வந்த நபரை போலீசார் கைத செய்து அவரிடம் இருந்து 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆந்திராவில் இருந்து சென்னை  வரும் ரயிலில் கஞ்சா கடத்திவரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் ரயில்வே போலீசார் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை 5.15 மணிக்கு ஹவுராவில் இருந்து ஆந்திரா விஜயவாடா வழியாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய நபரை சோதனை செய்த போது அவர் வைத்திருந்த பையில் 16 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதனைப் பறிமுதல் செய்த போலீசார் அதனைக் கடத்தி வந்த கோழிக்கோட்டைச் சேர்ந்த அப்துல்லா என்ற நபரை கைது செய்தனர். அவர் அதனை ஆந்திரா விஜயவாடாவில் இருந்து வாங்கிவந்ததாக தெரிவித்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Trending Now: