வல்லநாடு அருகே வாலிபர் வெட்டிக்கொலை

13-09-2019 05:00 AM

செய்துங்கநல்லுார.:

வல்லநாடு அருகே வாலிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது.

  வல்லநாடு அருகேயுள்ள நாணல்காடு கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். கோழிபண்ணையும் விவசாயமும் செய்து வருகிறார். இவரது மகன் இசக்கிபாண்டி (27). இவர் தந்தையுடன் சேர்ந்து விவசாயத்தையும், கோழிப்பண்ணையையும் கவனித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை இந்நிலையில் நேற்று இரவு இசக்கிப் பாண்டி   பைக்குடன் ரத்த வௌ்ளத்தில் நெல்லை துாத்துக்குடி மெயின்ரோட்டில் அகரம் பஸ்ஸ்டாப் அருகே கோரமான முறையில் வெட்டுகாயங்களுடன் இறந்துகிடந்துள்ளார்.

 இதுகுறித்து முறப்பநாடு போலீசாருக்கு அந்த வழியாக சென்றவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முறப்பநாடு போலீசார் வந்து பார்வையிட்டதில் அவரை 2க்கும் மேற்பட்டோர் வெட்டிகொலை செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி கலைச்செல்வன் வந்து விசாரணை நடத்தினார். அதைத் தொடர்ந்து இசக்கிப்பாண்டியின் உடலை கைப்பற்றி பாளை.,அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  இசக்கிப்பாண்டியை கொலை செய்தது யார். எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட் டுள்ளதால் அந்தப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.Trending Now: