பாரதியார் 98வது நினைவுநாள் எட்டயபுரத்தில் இளம் பாரதிகள் ஊர்வலம்

13-09-2019 05:00 AM

எட்டயபுரம்:
எட்டயபுரத்தில்  பாரதியின் 98 வது நினைவு தினத்தை முன்னிட்டு ரோட்டரி கிளப் சார்பில் 98 இளம் பாரதிகள் ஊர்வலமாக சென்று   பாரதியின் சிலைக்கு மலையணிவித்து மரியாதையை செய்தனர்.

பாரதி நினைவு அறக்கட்டளை மற்றும் ரோட்டரி கிளப் சார்பில் இளம் பாரதிகளின் ஊர்வலம் நடந்தது. எட்டயபுரம் தமிழ் பாப்திஸ்து துவக்க பள்ளி, மாரியப்ப நாடார் நடு நிலைப்பள்ளிகளைச், சேர்ந்த 98 மாணவ, மாணவிகள் பாரதி மற்றும் செல்லம்மாள் வேடமணிந்து பாரதி மணிமண்டபத்தில் உள்ள பாரதியின் வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மலர்துாவி மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து பாரதியின் பாடல்களை படியும் குழந்தை தொழிலாளர் முறை அகற்றவும், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை அகற்ற வலியுறுத்தியும், தேசப்பக்தியை வளர்க்கவும் உறுதிமொழி எடுத்தனர். பாரதியின் பாடல்களை பாடியும் வந்தே மாதரம் கோஷங்களை எழுப்பியும் பஸ் ஸ்டாண்ட், மேலவாசல் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக பாரதியின் இல்லத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து பாரதியின் இல்லத்தில் உள்ள பாரதியின் மார்பளவு சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சிக்கு  கோவில்பட்டி ரோட்டரி சங்க ஆளுநர் பாபு  தலைமை வகித்தார்.

   ரோட்டரி சங்க மாவட்ட தலைவர் விநாயகா.ரமேஷ், ரோட்டரி சாலை பாதுகாப்பு பிரிவு மாவட்ட தலைவர் முத்துச்செல்வம், ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

   ரோட்டரி செயலாளர் முத்துமுருகன் வரவேற்றுபேசினார். விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் டாக்டர்.ஷேக்சலீம் இளம் பாரதிகளின் ஊர்வலத்தை துவக்கி வைத்து பாரதி வேடமணிந்த மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க உறுப்பினர் சுரேஷ், தமிழ் பாப்திஸ்து பள்ளி தலைமையாசிரியர் லால் பகதுார் கென்னடி, மாரியப்ப நாடார் பள்ளி தலைமையாசிரியர் (பொ) சேர்மத்தாய் உள்ளிட்ட பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரோட்டரி சங்க இணை செயலாளர் பிரபாகரன் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில்பட்டி பாரதியார் நினைவு அறக்கட்;டளை மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

முன்னதாக எட்டயபுரத்திலுள்ள பாரதியின் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மலையணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
   கோவில்பட்டி ஆர்.டி.ஓ., விஜயா, எட்டயபுரம் தாசில்தார் அழகர் ஆகியோர் பாரதி நினைவு மணிமண்டபம் மற்றும் பாரதியார் பிறந்த அவரது இல்லத்தில் உள்ள பாரதியின்  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

 நிகழ்ச்சியின் போது எட்டயபுரம் வருவாய் ஆய்வாளர் பிரபாகர்,  வி.ஏ.ஓ.ஸ்ரீதேவி, இளம்புவனம் வி.ஏ.ஓ. முத்துக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு மரியாதையை செய்தனர்.Trending Now: