விவேகானந்தா கேந்திராவில் சித்தவர்ம கருத்தரங்கம்

27-08-2019 12:47 AM

கன்னியாகுமரி,:

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் சித்தவர்ம கருத்தரங்கம் நடந்தது

கருத்தரங்கிற்கு கேந்திர இயற்கைவள அபிவிருத்தி திட்ட செயலாளர் வாசுதேவ தலைமை வகித்தார். ராமகிருஷ்ணன் வரவேற்றார். கேந்திர சித்தா டாக்டர் கணபதி கருத்தரங்கை துவக்கி வைத்தார். விபத்தில் ஒடிவு, முறிவு ஏற்பட்டாலோ, அல்லது ரத்தகட்டு, பொருத்துவிலகலால் பாதிக்கப்படும்போது வர்மமுறைகள் மூலம் முழுமையான குணப்படுத்தும் முறைகள் பற்றி விவாதிக்கப்பட்டு, கட்டுரைகள் சமர்பிக்கபட்டது. சித்தவர்ம வளமையத்தில் உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து  விவாதிக்கப்பட்டது. தேசிய பாரம்பரிய சித்த மருத்துவ கூட்டமைப்பு தலைவர் ராமச்சந்திரன் உள்பட 200 க்கும் மேற்பட்ட சித்தவர்ம ஆசான்கள் கலந்து கொண்டனர்.