தக்கலை பெருமாள் கோயிலில் முப்பெரும் விழா

27-08-2019 12:47 AM

தக்கலை:

தக்கலை பெருமாள் கோவிலில் இந்து சகோதர இயக்கம் சார்பில் வரும் 2ம் தேதி முப்பெரும் விழா நடக்கிறது.

தக்கலை இந்து சகோதர இயக்கத்தின் சார்பில் குழந்தைகள் தினவிழா, பஜனை ஊர்வலம், 46வது விநாயகர் சதுர்த்திவிழா என முப்பெரும் விழா நடக்கிறது. காலையில் கணபதி ஹோமம், அகண்ட நாம ஜெபயக்ஞம், பஜனை ஊர்வலம் நடக்கிறது. ஊர்வலமானது பெருமாள் கோவில், பாத்தசாரதி கோவில் சமீபம் மெயின்ரோடு, தக்கலை பஸ் நிலையம், மேட்டுக்கடை இசக்கியம்மன் கோவில் வழி கேரளபுரம் அதிசய விநாயகர் கோவிலை சென்றடைகிறது. அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குபின் ஊர்வலமானது மேட்டுக்கடை, வெள்ளரி ஏலா, பாலஸ் ரோடு வழி பெருமாள் கோவிலை வந்தடைகிறது.  மகேஸ்வர பூஜை, பஜனை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், ஸஹஸ்ரநாம அர்ச்சனை, நடக்கிறது.  2018-19 ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சமய வகுப்பு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை தக்கலை பெருமாள் கோவில் இந்து சகோதர இயக்கத்தினர் செய்து வருகின்றனர்.