திருவட்டார் பகுதியில் அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்:வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி

27-08-2019 12:34 AM

திருவட்டார், :

திருவட்டார் சுற்றுவட்டார பகுதிகளில் தொடரும் திருட்டு வைரலாகும் வீடியோவை கண்ட பொதுமக்கள் பீதிக்குள்ளாயினர். 

கடந்த சில மாதங்களாக திருவட்டார் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திருட்டு, வழிப்பறி, சில்மிஷங்கள், அடிதடி போன்ற பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.  கடந்த மாதம் இரவிபுதூர் கடையில் ஒரு வணிக வளாகத்தில் ஆறு கடைகளில் தொடர் திருட்டு நடந்தது.  பூவன்கோடு, வெள்ளியோடு பகுதியில் பெண்ணின் செயின் பறிப்பு புலியிறங்கி சீட் கடை போன்று பல்வேறு திருட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம்  திருவரம்பு பகுதியை சேர்ந்தவர் கண்மணி. இவர் அதே பகுதியில் ரப்பர் ஷீட்  விற்பனைக்கூடம் நடத்தி வருகிறார். அவர் மதியம் சாப்பிட சென்றபோது டிப்டாப் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து கடையின் ஷட்டரை திறந்து கல்லாப் பெட்டியில் இருந்து அவசர அவசரமாக பணத்தைத் திருடி செல்லும் சி.சி.டிவி காட்சிகள் பதிவாகியுள்ளது. உரிமையாளர் கண்மணி சி.சி.டிவி காட்சிகளை கொண்டு திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில் சமூகவலை தளங்களில் கடையில் இருந்து பணம் திருடும் சி.சி.டிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. இருந்தாலும் இதுவரையிலும் இந்த திருட்டுகள் குறித்து எந்த நபர்களும் சிக்கவில்லை. இதனால் போலீசார் திணறி வருகின்றனர்.