மகன் மாடி­யில் இருந்து குதித்து தற்­கொலை :தாயும் துாக்­குப்­போட்டு தற்­கொலை

20-08-2019 12:54 AM

கயத்­தாறு,:

  ஆஸ்­பத்­தி­ரிக்கு சென்ற மகன் மாடி­யி­லி­ருந்து குதித்து தற்­கொலை செய்து கொண்­டதை அறிந்த தாயும் தோட்­டத்­தில் துாக்­குப்­போட்டு தற்­கொலை செய்து கொண்ட பரி­தாப சம்­ப­வம் கயத்­தாறு அருகே  நடந்­த­துள்­ளது.

துாத்துக்குடிமாவட்டம்கயத்­தாறு அருகே சவ­லாப்­பேரி சர்ச் தெரு­வைச் சேர்ந்­த­வர் சண்­மு­கையா (73). விவ­சாயி. இவ­ரது மனைவி தங்­கம் (62). இத் தம்­ப­திக்கு கருத்­தப் பாண்டி, சுடலை பாண்டி மற்­றும் முத்­துப்­பாண்டி என்று மூன்று மகன்­கள் . இரண்­டா­வது மகன் சுடலை பாண்டி இதே ஊரில் செந்­துார் பாண்டி என்­ப­வ­ரது மகள் கோம­தியை திரு­ம­ணம் செய்து கொண்­டுள்­ளார். இவர்­க­ளுக்கு இரண்டு பெண்­கு­ழந்­தை­கள் உள்­ள­னர்.

 சுடலை பாண்டி கயத்­தா­றில் ஆட்டோ ஓட்டி வந்­தார். அதன் பின்­னர் கேரளா சென்று இரும்பு வியா­பா­ரம் செய்­தார். இந்­நி­லை­யில் சில மாதங்­க­ளாக சுடலை பாண்டி உடல் நலம் பாதிக்­கப்­பட்டு பாளை., அரசு ஆஸ்­பத்­தி­ரி­யில் சிகிச்சை பெற்று வந்­தார்.

 இந்­நி­லை­யில் நேற்று காலை­யில் சிகிச்­சைக்­காக சுட­லை­பாண்டி, மனைவி கோமதி, தந்தை சண்­மு­கையா மூவ­ரும் பாளை., அரசு ஆஸ்­பத்­தி­ரிக்கு பஸ்­சில் புறப்­பட்­டுச் சென்­ற­னர். செல்­லும் வழி­யில்  பாளை., மார்க்­கெட்­டில் திடீ­ரென சுடலை பாண்டி பஸ்சிலி­ருந்து இறங்­கி­விட்­டார்.

பாளை., கிருஷ்­ணன் கோயில் தெரு­வில் சென்ற சுட­லை­பாண்டி அங்கு உள்ள  கடை­யின் மாடிப்­ப­டி­யில் ஏறி இரண்­டா­வது மாடிக்­குச் சென்று திடீ­ரென அங்­கி­ருந்து கீழே குதித்­து­விட்­டார். இத­னால் ரத்­த­வௌ்­ளத்­தில் அவர் அந்த இடத்­தி­லேயே பலியானார்.

 இது­பற்றி அறிந்­த­தும்.பாளை., போலீஸ் ஸ்டேஷ­னில் வழக்கு பதிவு செய்து சுடலை பாண்டி உடல் பிரேத பரி­சோ­த­னைக்கு அரசு ஆஸ்­பத்­தி­ரிக்கு அனுப்பி வைத்­த­னர். இது­பற்றி சவ­லாப்­பே­ரி­யி­லுள்ள சுட­லை­பாண்­டி­யின் தாய் தங்­கத்­திற்கு தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது.

மகன் இறந்த செய்தி கேட்டு  கத­றி­அ­ழு­தார். இத­னால் மன வேத­னை­யில் இருந்த தாய் தங்­கம் தங்­க­ளுக்கு சொந்­த­மான தோட்­டத்­திற்கு சென்­றுள்­ளார்.. அங்கு மாடு கட்ட வைத்­தி­ருந்த   கயி­றால்   மரத்­தில் துாக்­கு­போட்டு தற்­கொலை செய்து கொண்­டார்.

 இது­பற்றி தகவலறிந்த கயத்­தாறு இன்ஸ்­பெக்­டர் ஆவு­டை­யப்­பன் மற்­றும் போலீ­சார் சம்­பவ இடத்­திற்கு சென்று தங்­கம் உடலை பிரேத பரி­சோ­த­னைக்கு பாளை அரசு ஆஸ்­பத்­தி­ரிக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

தாயும் மக­னும் தற்­கொலை செய்து கொண்­டது உற­வி­னர்­க­ளி­டையே பெரும்­சோ­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.Trending Now: