மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் :தென்காசி கோர்ட் தீர்ப்பு

20-08-2019 12:51 AM

தென்காசி,:

குற்றாலம் அருகே மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி முதன்மை அமர்வு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

குற்றாலம் – ஐந்தருவி ரோட்டில் வெண்ணமடையை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது அக்காள் குத்தாலம் என்பவரை, கடந்த 2008ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

கண்ணன்– குத்தாலம் தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் இவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. கண்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், கணவன், மனைவிக்கு இடையே தகராறு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 14.02.2013ல் கண்ணன், தனது மனைவி குத்தாலத்தை தூக்கில் தொங்க விட்டு கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து மணிகண்டன் போலீசில் புகார் செய்தார். குற்றாலம் போலீசார் கண்ணனை கைது செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.

இதுதொடர்பான வழக்கு தென்காசி கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி கண்ணனுக்கு ஆயுள்தண்டனை மற்றும் 2 ஆயிரம் அபராதம் விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.