பி.எப்., அலு­வ­லக ஊழி­யர்­கள் 'கருப்பு பட்டை' ஆர்ப்­பாட்­டம்

20-08-2019 12:51 AM

திரு­நெல்­வேலி, :

நெல்லை மண்­டல பி.எப்., அலு­வ­ல­கத்தில் ஊழி­யர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்­பாட்டம் நடத்­தி­னர்.

அறி­­வி­யல்­பூர்வ வேலை ஒதுக்­கீடு, பணி­யிட மாற்­றத்தில் ஒரு­மித்த கொள்கை வகுத்தல், கரு­ணை அடிப்­படையில் பணி­யி­டங்­களை நிரப்­பு­வது, மறு சீர­மைப்பால் மறுக்­கப்­பட்ட பத­வி­உ­யர்­வை வழங்­கு­வது உள்­ளிட்ட கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி அகில இந்­திய வருங்­கால வைப்­பு­நிதி தொழி­லாளர் சம்­­மே­ளனம் சார்பில் கடந்த 1ம் தேதி துவங்கி வரும் 27ம் தேதி வரை நாடு முழு­வதும் பி.எப்., அலு­வ­லக ஊழி­யர்கள் கருப்­பு­பட்டை அணிந்து போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

இதன் ஒரு பகு­தி­யாக, நெல்லை மண்­டல பி.எப்., அலு­வ­ல­கத்தில் நேற்று மதிய உணவு இடை­வே­ளையில் ஊழி­யர்கள் கருப்­புபட்டை அணிந்து ஆர்ப்­பாட்டம் நடத்­தினர். இப் போராட்டம் 23ம் தேதி வரை நடக்­கி­ற­து. கோரிக்­கைகள் நிறை­வேறாவிட்டால், 28ம் தேதி ஒருநாள் வேலை­நி­றுத்தப் போராட்டம் நடக்கும் என அறி­விக்­கப்பட்­டுள்­ள­து.