பாளை., கே.டி.சி., நகர் வட பகு­தியில் கேம­ராக்கள் பொருத்த வலி­யு­றுத்­தல்

20-08-2019 12:50 AM

திரு­­நெல்­வேலி:

பாளை., கே.டி.சி., நகர், வட பகு­தி பொது நலச்­சங்­க பொதுக்­குழுக் கூட்­டத்தில் கண்­கா­ணிப்பு கேம­ராக்கள் பொருத்த வலி­யு­றுத்­தப்­பட்­­ட­து.

பாளை., பஞ்., யூனியன், கீழ­நத்தம், பஞ்­சா­யத்து,கட்­ட­பொம்மன் நகர், வட பகுதி பொது­ந­லச்­சங்க பொதுக்­கு­ழுக்­கூட்டம் தலைவர் சுப்­பையா தலை­மையில் நடந்­தது. செய­லாளர் முத்­தையா, பொரு­ளாளர் கணேசன் அறிக்கை வாசித்­தனர். அடுத்த 3 ஆண்டு காலத்­திற்கு நிர்­வாகிகள் தேர்வு செய்­யப்­பட்­ட­னர்.கே.டி.சி., நகர், வட பகு­தியில் சி.சி.டி.வி., கேம­ராக்கள் அமைக்க வலி­யு­றுத்தி தாலுகா போலீஸ்  ஸ்டேஷன் இன்ஸ்­பெக்டர் ரகு­ப­தி­ராஜா பேசினார். 5 ஆயிரம் வீடு­க­ளுக்கு குடிநீர் இணைப்பு வழங்­கு­வ­து, மங்­கம்மாள் ரோட்டில் இருந்து டார்லிங் நகர் வரையுள்ள 400 மீட்டர் ரோடு, கே.டி.சி.,நகர் வட பகுதி பொது­ மயான ரோடு உள்­ளிட்ட ரோடு­களை சீர­மைப்­ப­து உள்­ளிட்­ட கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி தீர்­மா­னங்கள் நிறை­வே­ற்­றப்­பட்­ட­ன.பஞ்­., செய­லாளர் இசக்­கி­முத்து, பேரா­சி­ரி­யர் ஜோதி­மணி, இன்­ஜி­னியர் மாய­கி­ருஷ்­ணன் உள்­ளிட்டோர் கலந்து கொண்­ட­னர்.