கட்­டடத் தொழி­லாளி வெட்­டிக்கொ­லை நெல்­லையில் 2ம் நாளாக போராட்­டம்

20-08-2019 12:49 AM

திரு­நெல்­வேலி:

நெல்­லையில் கட்­டடத் தொழி­லாளி கொலையை கண்­டித்து 2ம் நாளாக மக்கள் மறியல் போராட்­டத்தில் ஈடு­பட்­டனர். சம்­பவம் தொடர்­பா­க, எதிர் ­த­ரப்பைச் சேர்ந்த சில­ரிடம் தீவிர விசா­ரணை நட­க்­கி­ற­து.

நெல்லை டவுன், கருப்பந்துறையை சேர்ந்தவர் அந்தோணி மகன் மணிகண்டன்(28). கட்டடத்  தொழிலாளி. இவரது மனைவி முத்துமாரி(23). இவர்க­ளுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. 3 மாத குழந்தை உள்ளது. நேற்­று­முன்­தினம் இரவு மணி­­கண்டன், வடக்கு விளாகம், முப்­பி­டா­தியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மதன் மாரியப்பன்(27, கணேசன், சரவணன் ஆகியோருடன் கருப்பந்துறை ரோட்டில் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்­போது அந்த வழியாக 3 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், ரோட்டில் நின்று கொண்­டி­ருந்த மணிகண்டன் தரப்­பி­னரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். மணிகண்டனை தலை­யை துண்­டித்து கொலை செய்தனர். மதன் மாரியப்பனுக்கு  அரிவாள் வெட்டு விழுந்தது. கணேசன், சர­வணன் தப்­பி­­யோ­டினர். கொலை­யா­ளிகள் அங்­கி­ருந்து பைக்கில் தப்பிச் சென்றனர். காயமடைந்த மதன்  மாரியப்பன் பாளை.,ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

போலீஸ் குவிப்பு

இதுகு­றித்து நெல்லை ஜங்ஷன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் கமிஷனர் பாஸ்கரன், துணை கமிஷனர் சரவணன் சம்­பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. உதவி கமிஷனர் சதீஷ்குமார் தலைமையில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர்.

மறியல் போராட்­டம்

சம்­ப­வத்தைக் கண்­டித்து கருப்­பந்­து­றையில் மக்கள் சாலை­ம­றியல் போராட்டம் நடத்­தி­னர். மணி­கண்டன் உடலை சம்­பவ இடத்தில் இருந்து மீட்டு போஸ்ட்­மார்ட்­டத்திற்கு பாளை., ஐகி­ரவுண்ட் ஆஸ்­பத்­தி­ரிக்கு அனுப்ப போலீசார் முயன்­றனர். கொலை­யா­ளி­களை உட­­­ன­டி­யாக கைது செய்ய வலி­யு­றுத்தி, மணி­கண்­டனின் உடலை எடு­க்க விடாமல் தடுத்து மக்கள் போராட்­டத்தில் ஈடு­பட்­டனர். சமா­தானப் பேச்­சு­வார்த்­தை நடத்தி, மணி­கண்டன் உடலை போலீ­சார் கைப்­பற்றி போஸ்ட்­மார்ட்­டத்­திற்கு அனுப்­பி­­னர்.

பதட்டம் நீடிப்­பு

மணி­கண்­டன் கொலைக்கு கண்­டனம் தெரி­வித்து கருப்­பந்­து­றையில் நேற்று 2ம் நாளாக மறியல் போராட்டம் தொடர்ந்­தது. மணி­கண்டன் உற­வி­னர்கள், ஊர் மக்­கள் போராட்­டத்தில் கலந்து கொண்­ட­னர். கொலை­யா­ளி­களை கைது செய்யும் வரை மணி­கண்­டனின் உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் தெரி­வித்­தனர். அங்கு பதட்டம் நில­வி­ய­து. கருப்­பந்­துறை பகு­தியில் போலீசார் குவிக்­கப்­பட்­ட­னர்.

பேச்­சு­வார்த்­­தை

பாளை., தாசி­ல்தார் பால­சுப்­பி­ர­ம­ணியன், டவுன் போலீஸ் உதவி கமி­ஷனர் சதீஷ்­குமார் ஆகியோர் போராட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்­க­ளிடம் பேச்­சு­வார்த்தை நடத்­தினர். கொலை­யா­ளி­களை விரைவில் கைது செய்வோம், மணி­கண்டன் குடும்­ப­த்­திற்கு 4 லட்­சத்து 12 ஆயி­ரத்து 500 ரூபாய் அரசு நிவா­ரணம் வழங்­கப்­படும் என அவர்கள் உறு­தி­ய­ளித்­தனர். பின்னர் மணி­கண்டன் உடலை வாங்க உற­வி­னர்கள் சம்­மதம் தெரி­வித்­த­னர். அவர்­க­ளிடம் மணி­கண்டன் உடலை ஒப்­ப­டைக்க அதி­கா­ரிகள் நேற்று இரவில் நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­னர்.

10 பேருக்கு தொட­ர்­பு?

சம்­ப­வம் தொடர்­பாக இன்ஸ்­பெக்­டர்கள் புக­ழேந்தி, சோம­சுந்­தரம், வன­சுந்தர், வேல்­கனி தலை­மையில் 4 தனிப்­படை போலீசார் தீவிர விசா­ரணை நடத்தி வரு­கின்­றனர். கருப்­பந்­துறை வழி­யாக விளா­கத்­திற்கு செல்­வ­தற்கு ரோடு உள்­ளது. கருப்­பந்­து­றையில் இளை­ஞர்கள் இரவில் ரோட்டில் திரண்டு நின்று பேசு­வது வழக்கம்.

விளாகத்­திற்கு செல்லும் இளை­ஞர்கள் பைக்கில் ரோட்டில் செல்வர். பைக்­கிற்கு வழி­வி­டு­வது தொடர்­பாக, கருப்­பந்­துறை, விளாகம் இளை­ஞர்­க­ளுக்கு இடையில் அடிக்­கடி தக­ராறு ஏற்­பட்டு வந்­தது. இது­­கு­றித்து போலீசில் புகார் அளிக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் ஏற்­பட்ட விரோதம் கார­ண­மாக, சம்­பவம் நடந்­ததா என போலீசார் விசா­ரிக்­கின்­றனர். சம்­ப­வத்தில் 10 பேருக்கு தொடர்பு இருக்­கலாம் என போலீசார் கரு­து­கின்­றனர். இது­கு­றித்து விளாகத்தைச் சேர்ந்த சில­ரிடம் தீவிர விசா­ரணை நடக்­கி­ற­து.