ஸ்டெர்­­லைட் விருந்தில் பங்­கேற்­ற போலீஸ் அதி­கா­ரிகள் எதிர்ப்­பு­க்­குழு டி.ஐ.ஜி.,யிடம் மனு

20-08-2019 12:49 AM

திரு­நெல்­வேலி:

தூத்­துக்­கு­டியில் ஸ்டெர்லைட் அளித்­த விரு­ந்து உப­சா­ரத்தில் பங்­கேற்ற போலீஸ் அதி­கா­ரிகள் மீது நட­வ­டிக்கை எடுக்க வலி­யு­றுத்தி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்­ட­­மைப்­பினர் நெல்லை சரக டி.ஐ.ஜி., அலு­வ­ல­கத்தில் மனு அளித்­த­னர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்­துக்­குடி மாவட்ட மக்கள் கூட்­ட­மைப்பு சார்பில் ராஜேஷ்­குமார், மகேஷ்­குமார், கிருஷ்­ண­மூர்த்தி, வேல்­ராஜன், பிரபு உள்­ளிட்டோர் நேற்று நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி., அலு­வ­ல­கத்தில் மனு அளித்­தனர். மனு விப­ரம்:

தூத்­துக்­குடி ஸ்டெர்லைட் குடி­யி­ருப்பு வளா­கத்தில் கடந்த மாதம் 24ம் தேதி ஸ்டெர்லைட் நிர்­வாகம் சார்பில் தூத்­துக்­கு­டியின் பிர­தான போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்­பெக்­டர்­க­ளுக்கு விருந்து உப­சாரம் அளிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த விருந்தில் கலந்து கொண்ட இன்ஸ்­பெக்­டர்­க­ளுக்கு விளக்கம் கேட்டு தூத்­துக்­குடி மாவட்ட எஸ்.பி., கடிதம் அனுப்­பி­யுள்­ள­தாக தக­வல்வெளி­யா­கி­யுள்­ள­து.

ஸ்டெர்­லைட் ஆலைக்கு எதி­ரான போராட்­டத்தில் ஈடு­பட்­­­ட­வர்கள் போலீ­சாரின் துப்­பா­க்கி­க்­குண்­டுக­ளுக்கு பலி­யா­கி­யுள்­ளனர். அரசின் கொள்கை முடி­வுக்கு எதி­ராக அரசு பணி­யாளர்­கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆத­ர­வாக, சாத­க­மாக செயல்­பட முனை­வது அர­சுக்கு எதிரான செயல் ஆகும். இச்­செ­யலில் ஈடு­பட்ட போலீஸ் அதி­கா­ரிகள் மீது நட­வ­டிக்­கை எடு­க்க வேண்டும். ஸ்டெர்லைட் நிர்­வாகம் மீதும் நடவ­டிக்கை எடுக்க வேண்­டும்.இவ்வாறு மனுவில் கூறப்­பட்­டுள்­ள­து.