பணகுடியில் முயல் வேட்டையாடிய 2 பேருக்கு அபராதம்

20-08-2019 12:47 AM

பணகுடி: 

பணகுடியில்  முயல் வேட்டையாடிய இருவருக்குவனத்துறையினரால் அபராதம் விதிக்கப்பட்டது.பணகுடி  மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள காட்டுப்பகுதி குமரி மாவட்டம் பூதப்பாண்டி வனச்சரக பகுதியை சேர்ந்ததாகும்.

இப்பகுதியில் கடந்த சில நாட்களாக  முயல் வேட்டை நடை பெறுவதாக பூதப்பாண்டி  வனச்சரக ர்  திலீபனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில்   வனவர் பிரவீன்  வன காப்பாளர் சுபின்  மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள்  சரவணன்  ஜெகன் கொண்ட வன  பாதுகாப்பு குழுவினர் நேற்று பணகுடி காட்டுப்பகுதியில்  ரகசியமாக கண்காணித்த போது  இரு வாலிபர்கள் கையில்  இருந்த முயல்களுடன் ஓடவே இருவரையும் வன பாதுகாப்பு குழுவினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.