குடி­நீரை உறிஞ்ச பயன் படுத்­தப்­பட்ட மின்­மோட்­டார்­கள் பறி முதல்

20-08-2019 12:46 AM

பண­குடி.:

பண­கு­டி­யில் உள்ள  1 மற்­றும் 17 வது  வார்­டு­க­ளில் குடி­நீரை மின் மோட்­டார் மூல­மாக உறிஞ்சி எடுத்­த­தால்  அவை­கள் டவுண் பஞ்­சா­யத்து மூலம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

 நெல்லை மாவட்­டத்­தில் உள்ள டவுண் பஞ்­சா­யத்­திற்கு உட்­பட்ட பகு­தி­க­ளில் மின் மோட்­டார் மூலம் குடி நீரை  உறிஞ்சி எடுப்­ப­தாக மாவட்ட நிர்­வா­கத்­தி­டம்  பர­வ­லாக  மக்­கள் குறை தீர்க்­கும் நாளில்  புகார் மனுக்­கள் அனுப்­பப்­பட்­ட­தாக  தெரி­கி­றது.

இத­னை­ய­டுத்து மாவட்ட  கலெக்­டர் மற்­றும் டவுண் பஞ்­சா­யத்து களின் உதவி இயக்­கு­னர் ஆகி­யோ­ரின்  ஆணை­யின் பேரில் உரிய நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

அதனை தொடர்ந்து நேற்று பண­குடி டவுண் பஞ்­சா­யத்து  நிர்­வாக அதி­காரி  கிறி ஸ்தோபர் தாமஸ் தலை­மை­யில் சுகா­தார மேற்­பார்­வை­யா­ளர் சசி­கு­மார் பில் கலெக்­டர் மாரி­யப்­பன்  அசன் முகை­தீன் மற்­றும் சுகா­தா­ரப்­ப­ணி­யா­ளர்­கள்  மக­ளிர் போலீஸ்   உட்­பட பலர் 1  வது வார்டு  பாம்­பன்­கு­ளம்  17 வது வார்டு ரோஸ்­மி­யா­பு­ரம்  பகு­தி­க­ளில் அதி­ரடி சோதனை நடத்­தி­னர்.

அதில்  டவுண் பஞ்­சா­யத்து அனு­மதி இல்­லா­மல் குடி நீரை மின் மோட்­டார் மூலம் உறிஞ்சி  எடுத்­தது கண்டு பிடிக்­கப்­பட்­டது. இத­னால் சம்­பந்­தப்­பட்ட  வீட்டு உரி­மை­யார்­க­ளி­ட­மி­ருந்து  50 க்கும் மேற்­பட்ட மின் மோட்­டார்­கள்  பறி முதல் செய்­யப்­பட்­டன.

.மேலும் பண­குடி டவுண் பஞ்­சா­யத்து பகு­தி­யில் உள்ள அனைத்து வார்­டு­க­ளி­லும் முறை­கே­டாக குடி நீர் இணைப்­பினை மின் மோட்­டார் மூலம் பயன் படுத்­து­வோர் மீது  உரிய நட­வ­டிக்கை எடுத்த.      குடி­நீ­ர­இ­ணைப்­பு­துண்­டிக்­கப்­ப­டு­மெ­ன­வும் நிர்­வாக அதி­காரி கிறிஸ்­தோ­பர் தாமஸ் கூறி­னார்.