விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடு ஆலோசனை

20-08-2019 12:37 AM

நாகர்கோவில்:

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில், எஸ்.பி. ஸ்ரீநாத் முன்னிலையில் விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ், அகில பாரத இந்து மாகா சபா, சிவசேனா, விஷ்வ இந்து பரிஷத் போன்ற அமைப்பினர், அனைத்துத்துறை அலுவலர்கள், வட்டாட்சியர்கள், காவ்லதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நிறுவும் போதும், கரைக்கும் போதும்

விநாயகர் சிலை அமைக்க உத்தேசித்துள்ள அமைப்பாளர் சிலை வைக்கப்படும் இடத்திற்கு தடையில்லா சான்று பெற்று உரிய படிவத்தில்  தொடர்புடைய சப் கலெக்டர், கோட்டாட்சியரிடம் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். சிலை வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் பொது நிலமாக இருந்தால் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, நெடுஞ்சாலைத் துறையிமும், தனியார் இடமாக இருந்தால் நில உரிமையாளரின் தடையில்லா சான்று பெற வேண்டும். ஒலி பெருக்கி மற்றும் அனுமதிக்காக தடையில்லா சான்று தொடர்புடைய  போலீஸ் இன்ஸ்பெக்டரிடம்  பெற வேண்டும். தற்காலிக கூடாரம் தீ பாதுகாப்பு தர நிலையை கடைபிடிப்பதாக உள்ளன என்பதற்கு தடையில்லா சான்று தீயணைப்பு துறையிடம் பெற வேண்டும். மின் இணைப்பு வழங்கப்படுவதை குறிக்கும் கடிதம் மினசார துறையிடம் இருந்து பெற வேண்டும். சிலையை தயாரிக்க மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் அறிவுரையின்படி சுத்த களிமண் மற்றும் இயற்கையான சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ரசாயன நிறங்கள், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பயன்படுத்த கூடாது, எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் கூடாரத்திலோ, சிலை அமைக்கும் இடத்திலோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பந்தலுக்குள் எளிதாக செல்லும் வகையில் உள்ளே செல்ல வெளியே வர விசாலமான பாதைகள் அமைக்கப்பட வேண்டும். சிலையின் உயரம் அதன் பீடம், அடித்தளத்துடன் சேர்த்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆஸ்பத்திரிகள், கல்வி நிறுவனங்கள், பிறவழிபாட்டு தலங்கள் அருகில் சிலை வைப்பதை தவிர்க்க வேண்டும். காவல் துறையால் கொடுக்கப்படும் ஒலிபெருக்கி உரிமம் பயன்படுத்தும் கால அளவு காலை 2 மணி நேரம் மாலை 2 மணி நேரத்துக்கு மட்டுமே. கூம்புவடிவ ஒலிபெருக்கிகள் தடைசெய்யப்பட்டுள்ளது. ஸ்பீக்கர் பாக்ஸ் மட்டுமே பயன்படுத்தலாம். ஒலிபெருக்கியில் இருந்து வரும் சத்தம் பாடங்கள் உட்பட வரையறுக்கப்பட்ட குறைந்தபட்ச சத்தமாக இருக்க வேண்டும். அளவீட்டுக்க அதிகமான சத்தம் தடை செய்யப்படுகிறது. சிலை நிறுவப்பட்ட இடத்தில் அரசியல் கட்சி, ஜாதி தலைவர்கள் தட்டபோர்டு கண்டிப்பாக வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது. சிலை நிறுவப்பட்ட இடத்தில் 24 மணி  நேரமும் யாராவது 2 தன்னார்வ நபர்கள் பாதுகாப்புக்காக இரக்க ஏற்பாடு செய்ய வேண்டும். 4 சக்கர வாகனங்களான மினி லாரி, டிராக்டர் மட்டுமே சிலைகளை கரைக்க கொண்டு செல்லப் பயன்படுத்த வேண்டும். விநாயகர் சிலை நிறுவப்பட்ட இடத்திலோ கரைப்பதற்கு கொண்டு செல்லப்படும் ஊர்வத்திலோ சிலையை கரைக்கும் இடத்திலோ பட்டாசுகள் வெடிப்பது தடை செய்யப்படுகின்றது. விநாயகர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட பூ மாலைகள், துணிகள் அழகு சாதன பொருட்கள் கரைக்கப்படுவதற்கு முன்பு பிரிக்கப்பட வேண்டும். சிலைகளை கரைப்பதற்கான ஊர்வலம் 12 மணிக்குள் சிலைகள் கரைப்பதற்காக அறிவிக்கப்பட்ட இடத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். சிலை கரைப்புக்கான ஊர்வலம் செல்லும் பாதை காவல் துறையினர் வரையறுத்து கொடுத்த பாதை வழியாக மட்டுமே கொண்டு செல்லப்பட வேண்டும். சூரியன் மறைவதற்குள் அனைத்து சிலைகளும் கரைக்கப்பட வேண்டும். வருவாய்துறை, காவல்துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளால் பிறப்பிக்கப்படும் இதர நிபந்தனை, கட்டுபாடு விதிகளையும் ஏற்பாட்டாளர்கள் பின்பற்ற வேண்டும் என கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார். கூடுதல்  எஸ்.பி. வினய பாஸ்கரன், கலெக்டரின் நேர்முக  உதவியாளர் (பொது) சுகன்யா, அனைத்துதுறை அலுவலர்களும் இருந்தனர்.