பாரத ஸ்டேட் வங்கி ஆலோசனை செயல்முறை கூட்டம்

20-08-2019 12:36 AM

நாகர்கோவில்:

பாரத ஸ்டேட் வங்கியின் பிராந்திய அளவிலான முதல் கட்ட ஆலோசனை செயல்முறை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில்  கிளைகள் செயல்திறன்களை மறுபரிசீலனை செய்யும்படியும், செயல்திறன்களை மறுபரிசீலனை செய்யும்படியும், பொருளாதாரத்தின் பல்வேறு நிலைகளில் கடன் வரம்புகளை அதிகரிப்பதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகளை மையமாக கொண்டு வங்கித்துறையின் முன்பாக உள்ள பிரச்னைகளை குறித்தும் எதிர்கால திட்டம், முன்னேற்ற செயல்பாடு வழி குறித்து திட்டமிடல் வேண்டும். வங்கியானது தன் நாட்டு மக்களின் மூத்த குடிமக்கள், விவசாயிகள், சிறு தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர், இளைஞர்கள், மாணவர்கள், பெண்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில் புதுமைகளை கொண்டு வருவதற்கும் பெரிய தரவு பகுபாய்வுகளை இயக்குவதற்கும், தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை மேம்படுத்துதல் வேண்டும் என  திட்டமிடப்பட்டது. வங்கித்துறைகள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் குறித்து வல்லுநர்களின் கருத்து ஆவணங்கள் அடிப்படையில் பொதுத்துறை வங்கிகளில் சீர்திருத்தங்களை செயல்படுத்தும் நோக்கில் கருத்து பரிமாற்றம் நடந்தது. நந்தன் நிலேகானி வழங்கிய டிஜிட்டல் வழி பணமாற்றம், உதய கோட்டக் வழங்கிய பொதுத்துறை வங்கிகளில் நிலவும் பெரு நிறுவன ஆளுமை, சின்கா வழங்கிய எம் எஸ் எம் இ களுக்கான கடன், சுப்பிரமணியன் வழங்கிய பொதுத்துறை வங்கிகளில் தொழில்நுட்ப பயன்பாடு, ஆதித்தியா பூரி வழங்கிய சில்லரை கடன் பெரிய வாய்ப்பு, பேராசிரியர் ராம்சந்த், டாக்டர் பன்லாலா வழங்கிய விவசாய கடன், டேவிட் ராஸ்குன்ஹா வழங்கிய இந்தியாவில் ஏற்றுமதி கடன், டாக்டர் சரண்சிங் வழங்கிய நிதி கட்டமைப்பு, சவும்யாகாந்தி கோஷ் வழங்கிய 5 ட்ரிலியன் மில்லியன் பொருளாதாரத்தை நோக்கி வங்கி கடன்கள் ஆகியவை குறித்து கருத்து பரிமாற்றம் நடந்தது. பொருளாதார வளர்ச்சி கடன், உள்ட்டமைப்பு துறை, பண்ணைத்துறை மற்றுமு் நீல பொருளாதாரம், நீர்ச்சக்தி, எம் எஸ் எம் இ மற்றும் முத்ரா கடன்கள், கல்விக் கடன்கள், ஏற்றுமதிக் கடன், பசுமை பொருளாதாரம், ஸ்வச் பாரத், நிதிச் சேர்க்கை மற்றும் பெண்கள் அதிகாரம், நேரடி பயன் மாற்றங்கள், குறைந்த பணம், டிஜிட்டல் பொருளாதாரம் போன்றவைகள் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது. பொதுத்துறை வங்கிகள் அவற்றின் செயல் திறனை எவ்வாறு மேம்படுத்தலாம், எதிர்காலத்திற்கான செயல்திட்ட வழிமுறைகள் என பல செயல்படுத்தக் கூடிய புதுமையான பரிந்துரைகள் ஒன்றிணைக்கப்பட்டு ஒவ்வொரு எஸ் பி எல் சி பிராந்தியத்தின் கீழும் உள்ள கிளைகளின் ஒப்பீட்டு செயல்திறன் மதிப்பீட்டோடு மாநில அளவில் மேல் விவாதங்களுக்கு உள்ளூர் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. எஸ் பி எல் சி நிலைக்கு பிறகு உள் மற்றும் வங்கிகளுக்கு இடையேயான செயல்திறனை ஒப்பிட்டு பார்ப்பதற்கும் பொதுத்துறை வங்கிகளுக்கு இடையேயான செயல்திறனை ஒப்பிட்டு பார்ப்பதற்கும் பொதுத்துறை வங்கிகள் முழுவதையும் செயல்படுத்துவதற்கான வழி குறித்து பரிந்துரைகளை இறுதி செய்வதற்கும் தேசிய அளவில் இறுதி ஆலோசனை நடத்தப்படும்.