குமரியில் போலீசார் எழுத்து தேர்வு

20-08-2019 12:36 AM

 நாகர்கோவில்:

தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை  நிரப்ப வரும் 25ம் தேதி குமரி மாவட்டத்தில் எட்டு மையங்களில் எழுத்து தேர்வு நடக்கிறது.

தமிழ்நாட்டில் காவல்துறையில் காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. குமரி மாவட்டத்தில் வரும் 25ம் தேதி நடக்கிறது. நாகர்கோவிலில் எஸ்.டி இந்துக்கல்லூரி, கோட்டார் குமரி மெட்ரிக்பள்ளி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, சுங்காங்கடை சேவியர் கல்லூரி, பொன்ஜெஸ்லி கல்லூரி, குமாரகோவில் என் .ஐ கல்லூரி, வின்ஸ் ஆண்கள் மற்றும் பெண்கள் கல்லூரி உட்பட எட்டு கல்லூரிகளில் நடைபெறும் இந்த தேர்வில் மாவட்டத்திலிருந்து 6 ஆயிரத்து 60 பேர் கலந்து கொள்கின்றனர். தேர்வில் கலந்து கொள்பவர்கள் தேர்வில் கடைபிடிக்க வேண்டியவை பற்றிய குறிப்புகள் பின்னர் அறிவிக்கப்படும்.