பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : 448 கோரிக்கை மனுக்கள்

20-08-2019 12:36 AM

நாகர்கோவில்:

பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்  முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.

நாகர்கோவில்  கலெக்டர் அலுவலகத்தில்  கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்  பொதுமக்களிடம் இருந்து  கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளிகள் நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவைத் தொகை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 448 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. கூட்டத்தில் தோவாளை வட்டம் ஆரல்வாய்மொழி வடக்கு கிராமத்தை சேர்ந்த பெருமாள் என்பவர் 2016 ம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ம் தேதி பாம்பு கடித்து உயிரிழந்தற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 50 ஆயிரத்துக்கான காசோலையை அவரது மனைவி அமுதாவுக்கு கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபுல் காசிம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.