பாளை.யில் தேசிய கண்காட்சி துவக்கம்

10-08-2019 12:41 AM

திருநெல்வேலி:

மாநில, மாவட்ட அளவில் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்த கைவினைப்பொருட்களின் தேசிய கண்காட்சி பாளை.யில் நேற்று துவங்கியது.

மத்திய, மாநில அரசுகள் ஊரக கைவினைகள் மற்றும் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்து வதற்கும், அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் வகையில் பாளை., நேருஜி கலையரங்கில் 9ம் தேதி துவங்கி 12 நாட்கள் தேசிய  அளவில் சாராஸ் கண்காட்சி நடக்கிறது.

கண்காட்சியின் துவக்க விழா நேற்று மாலை  நட ந்தது. விழாவில் கலெக்டர் ஷில்பா கண்காட்சியை திருவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து,  அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் 140பேருக்கு மான்யம் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர்  மைக்கேல் அந்தோணி பென்னாண்டோ, உதவி திட்ட அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்கன்றனர்.

கண்காட்சியில் 9 மாநிலங்கள், 29 மாவடங்களில் உள்ள ஊரக பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு வினரால் உற்பத்தி செய்யப்பட்ட ஆடை வகைகள், கைத்தறி சேலைகள், வீட்டு அலங்கார பொருட்கள், எம்ப்ராய்டரி பொருட்கள், சுடுமண் பொருட்கள், கற்றாழை நார் உற்பத்தி பொருட்கள், பனை ஓலை பொருட்கள், அலங்கார சணல் பைகள், மகளிருக்கு தேவையான துணிகள், செயற்கை ஆபரணங்கள், விளையாட்டு பொருட்கள், மூலிகை மருந்துகள், இயற்கை உணவு வகைகள் உட்பட பல்வேறு பொருட்கள் 120 ஸ்டால்களில்  விற்பனைக்கு உள்ளன.