கேரளாவில் கனமழை எதிரொலி நெல்லை ரயில்கள் பகுதி ரத்து

10-08-2019 12:40 AM

திருநெல்வேலி:

 கேரளாவில் பெய்து வரும் கன மழை காரணமாக நெல்லை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட் டுள்ளது.

அதன் விவரம் :

* வண்டி எண் : 56737/ 56738 செங்கோட்டை–கொல்லம் – செங்கோட்டை பயணிகள் இன்றும் (10ம் தேதி), நாளையும் (11ம் தேதி) ரத்து செய்யப்படுகிறது.

* வண்டி எண்: 16791/16792 நெல்லை – பாலக்காடு– நெல்லை பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் இன்றும் (10ம் தேதி), நாளையும் (11ம் தேதி) நெல்லை– புனலுார் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* வண்டி எண்:16101/16102 சென்னை– கொல்லம் சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்  இன்றும்(10ம் தேதி), நாளையும் (11ம் தேதி)  செங்கோட்டை– கொல்லம் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இதுதவிர நேற்று சென்னையில் இருந்து புறப்பட்ட சென்னை– கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலும், 12ம் தேதி கொல்லத்தில் இருந்து புறப்படவுள்ள கொல்லம்– சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலும் செங்கோட்டை– கொல்லம் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இத்தகவலை தென்னக ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.