தேசிய கராத்தே போட்டி நெல்லை மாணவர் சாதனை

10-08-2019 12:40 AM

திருநெல்வேலி:

புதுச்சேரியில் நடந்த தேசிய கராத்தே போட்டியில் நெல்லை டவுனை சேர்ந்த மாணவர் தங்கபதக்கம் வென்று சாதனை படைத்தார்.

புதுச்சேரியில் கடந்த 3ம் தேதி  தேசிய கராத்தே போட்டி நடந்தது. இந்த போட்டியில் நெல்லை டவுனை சேர்ந்த மாணவர் ஆர்யா முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.

4ம் தேதி நெல்லை டவுன் லிட்டில் பிளவர் மாடல் பள்ளியில் நடந்த மாநில கராத்தே போட்டியில் முதலிடம் பிடித்ததோடு, ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றார்.

கராத்தே போட்டியில் தொடர் சாதனைகள் படைத்த மாணவர் ஆர்யாவிற்கு தினமலர் தினேஷ் பல்வேறு சாதனைகள் படைக்க வாழ்த்து தெரிவித்து பரிசு வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் மாணவர் ஆர்யாவின் தந்தை மணிகண்டன், ஐ.பி.எப்.எப். தமிழக செயலாளர் முத்துமாரிசன், மாரிவேல் உடனிருந்தனர்.

மாணவர் ஆர்யா, மாநில கராத்தே போட்டியில் 4 முறையும், தேசிய போட்டியில் 8முறையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.