வரும் 12ம் தேதி பக்ரீத் பண்டிகை மாவட்ட அரசு காஜி அறிவிப்பு

10-08-2019 12:40 AM

திருநெல்வேலி, :

நெல்லை மாவட்டத்தில் வரும் 12ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என கிழக்கு மாவட்ட அரசு காஜி முகம்மது கஸ்ஸாலி தெரிவித்தார்.

முஸ்லிம்களின் புனித நாட்களில் ஒன்றான ‘அரபா தினம்’ நாளை (11ம் தேதி) கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் நோன்பு வைப்பது நபி வழி சுன்னத்தாகும். 12ம் தேதி பக்ரீத் பண்டிகை பெருநாளாகும்.

இத்தகவலை நெல்லை கிழக்கு மாவட்ட அரசு காஜி முகம்மது கஸ்ஸாலி தெரிவித்தார்.