நெல்லையப்பர் கோயிலில் 1008 சுமங்கலிகள் பூஜை * வரலெட்சுமி நோன்புக்கு ஏற்பாடு

10-08-2019 12:39 AM

திருநெல்வேலி:

வரலெட்சுமி நோன்பை முன்னிட்டு நெல்லையப்பர் கோயிலில் சேவா பாரதி அமைப்பு சார்பில் 1008 சுமங்கலி பூஜை நடந்தது. ௩ ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நெல்லையப்பர் கோயிலில் வரலெட்சுமி நோன்பு நாளில் 1008 சுமங்கலி பூஜைகள் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. வரலெட்சுமி நோன்பை முன்னிட்டு நெல்லையப்பர் கோயிலில் அம்பாள் சன்னதி ஆயிரங்கால் மண்டபத்தில் 1008 சுமங்கலி பூஜை நேற்று நடந்தது. சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், சட்டை துணி, மஞ்சள் கயிறு, கண்ணாடி, சீப்பு, பூ மற்றும் பூஜை பொருட்கள் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சேவாபாரதி அமைப்புடன், பக்தர் பேரவையும் இணைந்து செய்திருந்தது. இதில் சுமார் ௩ ஆயிரத்திற்கும் மேற்பட்டர்கள் கலந்து கொண்டனர்.