இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி நெல்லை பி.எஸ்.என்.எல்., அழைப்பு

10-08-2019 12:38 AM

திருநெல்வேலி,:

இலவச திறன்மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்க தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என பி.எஸ்.என்.எல்., அழைப்பு விடுத்துள்ளது.

பி.எஸ்.என்.எல்., நிறுவனமும், தமிழக அரசின் திறன் மேம்பாட்டு கழகமும் இணைந்து நெல்லை பி.எஸ்.என்.எல்., முதன்மை பொது மேலாளர் அலுவலகத்தில் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

வேலை தேடும் இளைஞர்கள் தங்கள் திறனை மேம்படுத்தும் வகையில் நெட்வொர்க் மேனேஜ்மென்ட் இன்ஜினியர் என்ற பயிற்சி 6 வாரங்கள் வழங்கப்படுகிறது.

வரும் 13 ம் தேதி துவங்கும் இந்த பயிற்சியில் நெட்வொர்க்கிங் குறித்து

அறியவும், அதுகுறித்த அறிவை மேம்படுத்தி கொள்ளவும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சிக்கு தினமும் ரூ.100- பயணப்படியும் வழங்கப்படுகிறது. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் அனுபவம் வாய்ந்த தொழில்முறை பொறியாளர்கள் மூலம் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இலவச பயிற்சியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் http://rgmttc.bsnl.co.in/jobportal என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே பதிவு செய்திருந்தால் மீண்டும் பதிவு செய்ய தேவையில்லை.

நேர்முகத்தேர்வு விவரம் பதிவு செய்தோருக்கு நேரடியாக தெரிவிக்கப்படும்.

சான்றிதழ்கள், பதிவு செய்த விண்ணப்பத்தின் 2 நகல்கள், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல்களுடன் பதிவு செய்யாதவர்கள் 13ம் தேதி காலை 10 மணிக்கு முதன்மை பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் பங்கேற்கலாம்.

மேலும் விவரங்களுக்கு 0462–-2502599 அல்லது agmcscebtvl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

இத்தகவலை நெல்லை பி.எஸ்.என்.எல்., முதன்மை பொது மேலாளர் சஜிகுமார் தெரிவித்துள்ளார்.