முற்றுகை போராட்டம், 74 பேர் கைது: போலீஸ் குவிப்பு

10-08-2019 12:07 AM

நாகர்கோவில்:

எஸ்.டி.பி.ஐ. சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 74 பேரை போலீசார் கைது செய்தனர்.

காஷ்மீர் சுயாட்சி பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து எஸ்.டி.பி.ஐ., சார்பில்  நாகர்கோவிலில் தலைமை தபால் நிலையம் முன் மாவட்ட துணைத்தலைவர் ஜாஹிர் ஹூசைன் தலைமையில் முற்றகை போராட்டத்தில்  ஈடுபட்ட 74 பேரை போலீசார் கைது செய்தனர். முற்றுகை போராட்டத்தை முன்னிட்டு நாகர்கோவில் ஏ.எஸ்.பி., ஜவஹர் தலைமையில் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர்.