சுற்றுலா வந்த ‘ஓய்வு’ விமானப்படை அதிகாரி மரணம்

10-08-2019 12:07 AM

கன்னியாகுமரி:

 கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

மகாராஷ்டிர மாநிலம், புனேவை சேர்ந்த 12 பேர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். நேற்று காலை பகவதியம்மன் கோயில் உள்ளிட்ட பல இடங்களை சுற்றிப் பார்த்த பின்னர், விவேகானந்தர் பாறைக்கு படகில் சென்றனர். அங்குள்ள இடங்களை சுற்றி பார்த்தபோது, குழுவில் இடம் பெற்ற ஒருவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் அவருடன் வந்தவர்கள், விவேகானந்தா கேந்திரம் அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.

 தகவலறிந்த கன்னியாகுமரி போலீசார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். இதில் இறந்தவர் மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி பேபட் அண்ணா பவார் (65) என்பது தெரிய வந்தது.