வேலைவாய்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை : வருமான உச்சவரம்பு ரூ 72 ஆயிரமாக உயர்வு

10-08-2019 12:06 AM

நாகர்கோவில்:

வேலை வாய்பற்ற இளைஞர்கள் அரசு உதவித் தொகை பெற குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூபாய் 50 ஆயிரத்திலிருந்து 72 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது ,

தற்பொழுது அரசாணை (நிலை) எண் 127 தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு (ஆர்2) துறை நாள் 2019ஜூலை 25 ன் படி வேலைவாய்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறும் பயனாளிகள் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 50 ஆயிரத்திலிருந்து ரூ 72 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்பொழுது நடப்பு ஆண்டில் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்திற்கான உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். இதில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வயது உச்சவரம்பு 45ம், மற்ற அனைத்து பிரிவின ருக்கும் 40 வயது முடியாமல் இருத்தல் வேண்டும். பதிவு தாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை மற்றும் அனைத்து அசல் கல்வி சானசறிதழ்களுடன் அலுவலக வேலைநாளில் காலை 10 மணிமுதல் 1 மணி வரையிலும் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பபடிவங்களை பெற்று கொள்ளலாம். இவ்வாறு வேலை வாய்ப்பு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.